ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் நாடு சர்வதேச அளவில் பயணங்களை தொடங்குவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் முதலாவதாக கோர்சிகா தீவுக்கு செல்லும் விமானங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் இந்த பாஸ் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கல் கூறுகின்றன.
அதோடு மட்டுமில்லாமல் இந்த பாஸை இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் இந்த திட்டத்தில் உள்ள நல்ல விஷயமாகும். மேலும் பிரான்ஸ் நாட்டில் யாரேனும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலாக ஆன்லைன் ஆவணம் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதை அவர்கள் பிரிண்ட் அல்லது சேவ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.