Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் செய்வார்களா.? மனிதாபிமானம் இல்லாமல் நடந்த செயல்… போலீசார் தீவிர விசாரணை…!!

சுண்ணாம்புக்கல் குவாரி பகுதியில் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனக்குறிச்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுண்ணாம்புகல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் தங்களது ஆடுகளை அப்பகுதிக்கு மேய்த்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த குவாரி அருகில் ஆண் மற்றும் பெண் என குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் இந்த செய்தி பரவியதால் மக்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி பிணமாக கிடந்த குழந்தைகளை பார்த்துள்ளனர். அதன்பிறகு அந்த குழந்தைகளை அந்த இடத்திலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர். இதனை அப்பகுதியில் வசிக்கும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி ராயர் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாசில்தார் குமரய்யா, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி அந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த சுண்ணாம்புக்கல் குவாரி அருகில் இரட்டை குழந்தைகளை வீசி சென்ற பெண் யார் என்ற விபரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |