Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி 30 நாடுகளுக்கு சுற்றுலா…. ரெடியான பட்டியல் அறிவிப்பு ….!!

இங்கிலாந்து நாட்டு மக்கள், சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடுகளை அரசு பட்டியல் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் அனைத்திலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் இத்தொற்று இங்கிலாந்திலும் பரவியதால் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்றால் அந்நாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த தளர்வின் ஒரு பகுதியாக மே 17ஆம் தேதியிலிருந்து மக்கள் தங்களுடைய விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்றுள்ளது.

இதற்காக இங்கிலாந்து அரசு கொரோனா பரவலை பொறுத்து சிவப்பு மற்றும் பச்சை என்ற பட்டியல்களை தயாரித்து வருவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா, பிரேஸில் உட்பட 40 நாடுகள் சிவப்பு பட்டியலிலும், போர்ச்சுக்கல் மாலத்தீவு உட்பட குறைந்தபட்சமாக 30 நாடுகளை பச்சை பட்டியலிலும் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம் என்றும் அறிவித்தது

Categories

Tech |