பிரித்தானியா இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் நிறைமாத கர்ப்பத்துடன் தனது குழந்தையை இடுப்பில் சுமந்து நடந்து செல்லும் எளிமையான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி தனது தாத்தாவின் இறுதி சடங்குகளுக்காக பிரித்தானியாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவர் தனது பாட்டியான மகாராணியிடம் அதிக நேரத்தை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இளவரசர் ஹரியின் சகோதரர்கள் அவருடன் மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே இருந்த வந்த நிலையில் இளவரசர் ஹரி திடீரென அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். மேலும் இளவரசர் ஹரி அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு அவருடைய மனைவி நிறை மாத கர்பத்துடன் தனது மகனை சுமந்து கொண்டு சாதாரணமாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால் கௌரவமாக காரில் செல்ல வேண்டி இளவரசி ஒரு சாதாரண பெண் போல் நிறைமாத கர்ப்பத்துடன் குழந்தையை தூக்கி கொண்டு, காலில் செருப்பில்லாமல் நடந்து செல்வது பாவமாகத்தான் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் எளிமையான தோற்றத்தை தான் விரும்புவதாகவும், அதற்காக தான் அவர் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு வந்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவித்துள்ளது.