புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டை குத்த பயன்படுத்தும் தார்குச்சி சிறுவன் தொண்டையில் குத்தியதால் சிறுவன் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொன்னக்காட்டை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராகுல் என்ற மகன் இருந்தான். இவர் அப்பகுதியிலுள்ள உறவினர் பழனியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டில் பந்தயத்திற்காக மாட்டு வண்டி ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மாட்டு வண்டியை பயிற்சிக்கு எடுத்த போது சிறுவன் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டுள்ளார்.
இதனனயடுத்து வல்லவாரி காலனி பகுதியில் பயிற்சியில் ஈடுபட்ட போது மாட்டை குத்துவதற்காக சிறுவன் கையில் வைத்திருந்த தார்குச்சி மாட்டு வண்டி பள்ளத்தில் ஏறி இறங்கும் போது தொண்டையில் குத்தி சிறுவன் காயம் அடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனியப்பன் ராகுலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.