Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்பருத்தி’ சீரியலில் இணையும் பிரபல நடிகை?… வெளியான புதிய தகவல்…!!!

செம்பருத்தி சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியல் ஒருகாலத்தில் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டதில் இருந்து டிஆர்பி-யில் பின் தங்கியுள்ளது . தற்போது கார்த்திக்கு பதிலாக அக்னி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது இந்த சீரியலில் புதிய நடிகர்கள், நடிகைகள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக பிரபல சீரியல் நடிகை ராணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். செம்பருத்தி சீரியலில் இவரின் கதாபாத்திரம் என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Categories

Tech |