Categories
உலக செய்திகள்

தற்காலிக முகாமில் சிறுமிகள் இருவர்…. சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுங்கள்…. வலியுறுத்தியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்….!!

சிரியாவில் தற்காலிக முகாமில் தங்கி இருக்கும் இரண்டு சிறுமிகளை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயால் சிரியாவுக்கு 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் சுற்றுலாவுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சுற்றுலாவுக்கு வந்த சமயத்தில் ஐ.எஸ் அமைப்பிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் வாழ்வதால் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் அந்த 2 சிறுமிகளையும் உடனடியாக சுவிட்சர்லாந்துக்கு அழைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தீவிரவாதக் குழுக்கள் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபர்களுக்கு பிறந்ததால் இந்த பிள்ளைகள் அதன் விளைவுகளை சுமக்கக் கூடாது எனவும் அனைத்து வகையிலும் இந்தப் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாய கட்டத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமிகளில் மூத்தவளுடைய காலில் குண்டுகள் பாய்ந்து உள்ளதால் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற பாதுகாப்பற்ற ஒரு அபாயகரமான சூழலில் அவர்கள் வாழ்வது சரியானது அல்ல என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்களை சுவிட்சர்லாந்திற்கு திரும்ப அழைத்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |