ஸ்டோக் பார்க் ஆடம்பர விடுதியை முகேஷ் அம்பானி 57 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 57 மில்லியன் பவுண்ட் கொடுத்து பிரித்தானியாவில் உள்ள ஸ்டோக் பார்க் ஆடம்பர விடுதியை வாங்கியுள்ளார். மேலும் இந்த ஆடம்பர விடுதி 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடுவே 49 படுக்கையறை வசதிகள் கொண்டதாகும்.
மேலும் இதில் 13 டென்னிஸ் ஆடுகளங்கள், கோல்ப் திடல், 16 ஏக்கரில் அரிய வகை தாவரங்களுடன் கூடிய பூங்கா போன்றவை உள்ளன. மேலும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டோக் பார்க் விடுதி 2008 ஆம் ஆண்டு வரை ஒரு தனியார் இல்லமாக பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.