ஆசிரியர் ஒருவர் பேனாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவின் மூலம் மாணவிகளுக்கு தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை படம் எடுத்ததால் 6 மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.
கனடாவில் ராயன் ஜார்விஸ் என்னும் ஆங்கில ஆசிரியர் மாணவிகளுடன் எப்பொழுதும் ஓட்டியபடி நிற்பதும் தேவையில்லாமல் மாணவிகளிடம் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் அவர் வகுப்புகளின் போது சேக்ஸ்பியர் தொடர்பான பாடங்களை எடுப்பதாகவும் ஆபாச படங்களை காட்டி மாணவிகளை தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் தனது பாக்கெட்டில் வைத்துள்ள ஒரு பேனாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் மாணவிகளின் இடுப்புக்கு மேல் மார்புப் பகுதிகளை படம் பிடித்துள்ளார். அந்த கேமராவில் மொத்தம் 27 மாணவர்களின் வீடியோக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கனடாவில் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான மேடிசன் என்னும் மாணவி ஜார்விஸ் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அதில் எனது மார்பை ரகசியமாக படம் எடுத்ததன் மூலம் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். அதனால் எனக்கு இரண்டு 200000 டாலர் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார்.