Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ரூபாய் 150 க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும் என்று அறிவித்துள்ளது. தடுப்பூசி விலை உயர்த்தப்பட்ட நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |