பாகிஸ்தானை சேர்ந்த Edhai அறக்கட்டளை நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை நிலவி வருகின்றது. இவற்றை சரிப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த Edhai என்ற அறக்கட்டளை கவலை வேண்டாம் நாங்க இருக்கோம் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. மேலும் அந்த அறக்கட்டளை சார்பில் 50 ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.