வேலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் பதிவான மொத்த வாக்குகள் இயந்திரங்களும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்ற நிலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இதில் அதிமுகவின் AC ஷண்முகம் 4,406 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
வேட்பாளரும் வாக்குகளும் :
திமுக ( கதிர்ஆனந்த் ) 3994
நாம் தமிழர் கட்சி ( தீபலட்சுமி ) 400