புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லுரி மாணவி கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.வி. கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு துளசி என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் முக கவசம் அணிய வேண்டுமென்றும் அனைவரும் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற வாசகங்களை எழுதி பதாகைகளை உடலில் கட்டிக்கொண்டு சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதனையடுத்து முககவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கியுள்ளார். இந்த செயலை பார்த்து காவல் துறையினர் ஜீப்பை விட்டு இறங்கி வந்து துளசியை பாராட்டியுள்ளனர். மேலும் பொதுமக்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.