ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் Dr.ஷர்மிளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன் அத்திப்பூக்கள், பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஷர்மிளா தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷர்மிளாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமடைந்துள்ளனர்.