Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழித் தெரியல….. மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. குழந்தைகளை தவிக்க விட்ட தாய்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரப்பட்டு கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த மலர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மலர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |