கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் இந்தியாவுடனான தற்காலிக போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இருப்பினும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய மக்களுக்கு தனது ஆதரவு கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்களுக்கு எனது தோழமை செய்தியை அனுப்ப விரும்புகிறேன்.
இந்த போராட்டதில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் இமானுவேல் லெனைன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் இந்தியாவுடனான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்த போதிலும் இந்தியாவிற்கு உதவ ஆதரவாக இருப்பதாக அனுப்பிய செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.