பிரபல சீரியல் நடிகை நீலிமா இறந்ததாக பரவிய வதந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து அசத்தியவர் நீலிமா. இவர் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை நீலிமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
mudiyala da! Neenghalum unga vizlambaramum 🤦🏼♀️🤦🏼♀️ https://t.co/yrhDGE5wZH
— neelima esai (@neelimaesai) April 22, 2021
இந்த சீரியல் கொரோனா பாதிப்பு காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வப்போது இவர் தனது அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நீலிமா இறந்ததாக ஒரு யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டுள்ளனர் . இதைப் பார்த்து கடுப்பான நீலிமா ‘முடியல நீங்களும் உங்க விளம்பரமும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.