Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை….25 நோயாளிகள் பலி….60 பேர் மோசமான நிலை….!!!

டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் நோயாளிகளின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது.

டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாபாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் ராஜேந்திரா நகரில் உள்ள சர் கங்காராம் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலை ஏற்பட்டு 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் தீர்ந்துபோன ஆக்ஸிசன் அளவினால் 24 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் என தகவல் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் 60 நோயாளிகள் இருப்பதாகவும் அந்த ஆஸ்பத்திரியின் மூத்த தலைவர் மேலும் உள்ள ஆக்ஸிஜன் 2 மணி நேரத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது வென்டிலேட்டர்களும், பைபாப் கருவிகளும் (சுவாச கருவி) திறம்பட செயல்பட வில்லை.

இந்நிலையில்   60 நோயாளிகளின் நிலைமை நெருக்கடியில் இருப்பதாகவும் உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் 60 நோயாளிகளும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அவசர சிகிச்சை பிரிவிலும்  மேனுவல் வெண்டிலேஷன் பின்பற்ற பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சதேந்திர கட்டோச் , “ குறைந்த ஆக்சிஜன் செறிவு தான் சிக்கலான நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளது . தற்போது மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உயர் அழுத்த, நிலையான ஆக்சிஜன் வினியோகம் தேவைப்படுகிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |