இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு தவிர்த்து மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் கூட மூட வாய்ப்புள்ளது. பெரிய கடைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இரண்டாவது அலையில் இளைஞர்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.