பதஞ்சலி வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பதஞ்சலி யோக பீட வளாகத்தில் உள்ள 83 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பதிவில் பதஞ்சலி வளாகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கூறினார்.
மேலும் இங்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆச்சாரியகுலத்திற்கு பயில வரும் மாணவர்கள் அனைவருக்கும் முறையான கொரோனா பரிந்துரையின்படி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இங்கு பார்வையாளர்களாக வந்த 14 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார் .
அவர்கள் முக்கியமான பகுதிக்கு முறையான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நான் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே யோகா மற்றும் சுகாதார பயிற்சிகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.