கேரளாவில் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா தொற்றின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் மிக அதிகமாக காணப்படுவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு இரவு நேர ஊரடங்கு விதித்துள்ளது. தற்போது இன்று மற்றும் நாளை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணம் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கு தடை எதுவும் இல்லை என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையில் குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசின் அனுமதியுடன் மட்டுமே கோவிலில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளனர்.