Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரவுநேர ஊரடங்கால்… ரயில் நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளி… பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள் …!!

வேலூரில் இரவு நேர ஊரடங்கால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே வேலூர் மாவட்டத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பஸ், ஆட்டோ, கார், வேன் போன்ற எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதி இல்லாத காரணத்தால், வெளியூர்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் ஆன்மீகம், கல்வி, சுற்றுலா, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு செய்து வருகின்றனர். இதனிடேயே காட்பாடி ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் 3-வது நடைமேடையில் வடமாநில தொழிலாளர்கள் ரயில் நின்று செல்லும் பகுதியில் ஏராளமானோர் குவிந்து காணப்பட்டனர்.

இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி, சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ரயில்வே நிலையத்தில் குவிந்துள்ள கூட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு செய்து ரயிலில் பயணிப்பவர்கள்  மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழியனுப்ப வருபவர்களை ரயில் நிலையத்தின் முகப்பிலேயே திருப்பி அனுப்பி விட்டனர்.

Categories

Tech |