Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலி வளாகத்தில் 83 பேர் கொரோனா தொற்று… யோகா குரு பாபா ராம்தேவ் இல்லை என்று மறுப்பு…!!

 பதஞ்சலியின் யோக பீட வளாகத்தில் 83 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ற செய்தி பொய்யானவை என்று யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் நிரம்பியுள்ளது. ஆனால் ஹரித்வார் உள்ள பதஞ்சலி யோகபீட வளாகத்தில் இன்றளவும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பதஞ்சலி யோகபீட வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா நோய் இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அது முற்றிலும் பொய்யான செய்திகள் என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் டுவிட்டர் பதிவில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். இங்குள்ள யோக பீட வளாகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் ஆச்சாரியகுளத்தில் பயில்வதற்காக வருகின்ற புதிய மாணவர்களுக்கு கொரோனா நெறி முறைகளின் கீழ் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்பே வளாகத்தில் அனுமதிக்க படுகின்றன.

இங்கு பார்வையாளராக வந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்களை முக்கியமான வளாக பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தவிர்த்து மேலே சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்திகள் மற்றும் பொய்யானவை ஆகும். யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள், தினமும் யோகா மற்றும் சுகாதார நிகழ்ச்சிகளை காலை 5 மணி முதல் 10 மணி வரை நடத்தி வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |