காணாமல் போன கணவனை தேடித் தருமாறு மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு உறவினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி அனுசுயா வருவது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் அவர்கள் வந்திருக்கும்போது தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே போல் இருவரும் வந்து ரவியின் வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் திடீரென்று நேற்று லட்சுமணனை காணவில்லை. பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவருடைய மனைவி அனுசுயா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.