தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25, 26, 27,28 ஆகிய தேதிகளில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, வேலூர், விருதுநகர், தென்காசி மற்றும் குமரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.