Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இதற்கு மட்டும் தடை இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தடையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு நான்கு லட்சம் பொருட்கள் தடுப்பு ஊசிகள் கொண்டு வரப்பட்டன. 2 லட்சம் கோவிஷில்டு , 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதால், மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |