Categories
தேசிய செய்திகள்

கவலையில் மத்திய அரசு….! ”நாடு முழுவதும் பெரும் பரபரப்பு”…. ஷாக் ஆன பாஜகவினர் …!!

மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜக கட்சிக்கு எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆவதால் பாஜக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் கால கட்டத்தில் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து 50 ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைப்பதற்காக பாகிஸ்தானை சேர்ந்த Edhi அறக்கட்டளை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா போரில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என ட்விட் போட்டுள்ளார்.

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர்,  கொரோனவை எதிர்த்து போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் #PakistanstandswithIndia என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

அதே போல மத்திய அரசுக்கு எதிராக ஹேஸ்டேக் #ModiAbandonedIndia, #BjpDestroyedIndia, ட்ரெண்டாகி வருகின்றது. இதில் பலரும் மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது மத்திய அரசுக்கு பெரும் கவலையையும் , பாஜக தொண்டர்களுக்கு  பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/Ssushantkamble/status/1385803205678821383

https://twitter.com/avinashforjesus/status/1385783358748192772

https://twitter.com/Complan__Boy/status/1385834952701276160

https://twitter.com/avneet______/status/1385769434984321028

Categories

Tech |