Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி இலவசம்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 3.50 இலட்சத்தை எட்டியுள்ளது. எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருகிறது. தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |