தமிழகத்தின் தடுப்பூசிகள் குறைந்துவிட்ட நிலையில், தற்போது 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசிகள் குறைந்து கொண்டு வருவதால் மேலும் தடுப்பூசிகள் வேண்டும் என்றும் முதல்வர் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து கோவேக்சின் 2 லட்சம் டோஸ்கள் மற்றும் கோவிஷீல்டு 2 லட்சம் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் வந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உயிரை காப்பாற்றும், தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.