திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கடைகள், தியேட்டர்களில் உதவி ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் சராசரியாக 30 என்ற அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி உதவி ஆட்சியர் ஆனந்தி கொரோனா கட்டுப்பாடுகள் வணிக நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறதா என்று நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் குறிப்பாக ஓட்டல்கள், துணிக்கடைகள், தியேட்டர்கள் என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபின் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டார். இந்த திடீர் ஆய்வின்போது கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.