Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலால் வியர்க்குரு அதிகமாக வருதா..? அதை சரி செய்ய இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம்.

கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனை இயல்பாகவே வந்துவிடும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான்.

சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இதை  பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை  இருக்காது.

வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம்.

மஞ்சள் கிருமி நாசினி என்பதால் வியர்க்குருவை மட்டுப்படுத்தும்.

கிருமித் தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Categories

Tech |