இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.