இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 75 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றி திரிபவர்கள் மற்றும் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து வருபவர்கள மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிபவர்கள் என மொத்தம் 75 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.