Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் மக்களவை ”5_ஆவது சுற்று” அடிச்சு தூக்கிய அதிமுக …..!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 11,220 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார்.

மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது.

Image result for வேலூர் மக்களவை

தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் எண்ணப்பட தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வருகின்றார்.மேலும் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 34,052 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்த நிலையில் பின்னர் அனைத்து சுற்றுக்களிலும் அதிமாகவே முன்னிலை வகித்தது.

Image result for வேலூர் மக்களவை

தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகமே  முன்னிலை வகித்து வருகின்றார். அவருக்கும் திமுக வேட்பாளருக்கும் 11,220 வாக்குகள் முன்னிலை வகித்து வருகின்றார் . 5_ஆவது சுற்று நடைபெற்றுக்கு வரும் நிலையில் , ஏசி சண்முகம் 1,78,138 வாக்குகளும், கதிர் ஆனந்த 1,66,918 வாக்குகளும்  நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி 8,969  வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Categories

Tech |