ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் தமிழகத்தில், திரையரங்குகள், கூட்ட அரங்குகள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை இயங்குவதற்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.