தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள்,கூட்ட அரங்குகள் மற்றும் பார்கள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. பெரிய கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.