தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
போல பெரிய கடைகள், ஷாப்பிங் மால் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் இதர அனைத்து கடைகளும் உரிய உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்படும். எனினும் பெரிய வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.