Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்பயரின் முடிவிற்கு கடுப்பான ரோகித் சர்மா…! மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா …?

நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிரான போட்டியில் ரோகித் சர்மா, அம்பயரின் முடிவிற்கு அவரை திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது .

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா –   டி காக் களமிறங்கின. இதில் முதல் ஓவரில் 5வது பந்தில் அம்பயர் ,ரோஹித் சர்மாவிற்கு அவுட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகித் சர்மா மைதானத்திலேயே அவரை கடுமையாக வசைபாடினார் . இதனால் அம்பயர் டி.ஆர்.எஸ் முடிவுக்கு செல்ல, நாட் அவுட் என்று தெரிந்தது . இதை தொடர்ந்து  மீண்டும் விளையாடிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் குவித்தார்.

இருந்தாலும் நேற்று ரோகித் சர்மா அம்பயரிடம் ,ஐபிஎல் விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக ,இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது . இதற்கு முந்தைய ஆட்டத்தில் பீல்டிங் செய்வதற்கு ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான  ரோகித் சர்மாவிற்கு, ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. தற்போது நேற்று அம்பயரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக ,நடவடிக்கை  எடுக்கப்படலாம்  என்று தெரிகிறது.

Categories

Tech |