Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… 4 தெருக்களுக்கு “சீல்”… அதிரடி காட்டும் அதிகாரிகள்..!!

திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் தகரத்தால் அடித்து “சீல்” வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 21-ஆம் தேதி இந்திராகாந்திநகர், நாயக்கர் புதுத்தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு ஆகிய நான்கு தெருக்களில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த தெருக்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்தனர்.

Categories

Tech |