தேனியில் தபால்கள், ஆதார் கார்டுகள் குப்பைமேட்டில் கொட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குப்பைமேடு அமைந்துள்ளது. இந்த நிலையில் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வரப்பட்டிருந்த எல்.ஐ.சி தபால்கள், வங்கி கடிதங்கள், ஆதார் அட்டைகள், அரசுப்பணி கடிதங்கள் போன்றவை குப்பைமேட்டில் கொட்டப்பட்டு கிடந்துள்ளது.
இதனை தபால் துறையின் பணியாளர்கள் உரியவர்களிடம் வழங்காமல் குப்பைமேட்டில் போட்டு சென்றனர். இந்த தகவல்கள் கடந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்தே வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தபால் துறையின் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.