திண்டுக்கல்லில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கோபாலபுரத்தில் வசித்து வரும் வில்சன்குட்டி பாபு என்பவர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததால் சத்திரப்பட்டி காவல் துறையினரால் சென்ற 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்ததை தொடர்ந்து பாபுவை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.