Categories
மாநில செய்திகள்

உணவகங்களில், தேநீர் கடைகளில்…. இதற்கு மட்டும் அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |