Categories
தேசிய செய்திகள்

சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பொது வெளிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு இன்று புதிதாக மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 26-ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |