தேனியில் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 18,680 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 31 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,476 ஆக அதிகரித்துள்ளது.