Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வழிபட்டு தளங்களில் அனுமதியில்லை…. தமிழகம் அரசு புது உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மதம்சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று குடமுழுக்கு  திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்,  இந்து சமய அறநிலை துறை ஆணையரிடம் அனுமதி பெற்று இருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்தாலோ முன்னேற்பாடுகள் செய்து இருந்தால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப் படுகிறது.

புதிய குடமுழுக்கு, விழாக்கள் நடத்த அனுமதி இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்கள். திருமணம் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அதேபோல் இறுதி ஊர்வலத்தில் முதலில் 50 பேர் பங்கேற்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |