Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவி வருகிறது… 11 தெருக்களுக்கு அதிரடி “சீல்”… தீவிரம் காட்டும் சுகாதார பணியாளர்கள்..!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இதுவரை 11 தெருக்களுக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ராஜீவ்காந்தி தெரு, மேட்டுப்பாடி ரோடு, எம்.டி.எஸ். காலனி, அழகர் தெரு ஆகிய தெருக்களில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அந்த தெருக்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கூறியதாவது, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள இடங்களில் தகரத்தால் அடைத்து “சீல்” வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 11 தெருக்களுக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநபர்கள் அந்த தெருக்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளும் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களில் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |