பிரிட்டன் அரசகுடும்பத்தில் மகாராணியாருக்கு பிறகு கேட் தான் அதற்கு தகுதியானவர் என்று அவரது தாய்மாமா கூறியுள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து முழுமையாக அனைத்தையும் எந்த அளவிற்கு எளிதில் நாசமாக்க முடியும் என்பதை மேகனை பார்த்தால் தெரியும். இதற்கு அப்படியே எதிராக இருப்பவர் கேட். இவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் போது வாகனத்தின் ஜன்னல் வழியே கருப்பு நிற உடை அணிந்து இருந்தார். அப்போது அவரது கண்கள் அரச குடும்பத்தில் பிறந்த இளவரசிகளை விட மிகுந்த கம்பீரத்துடன் தோற்றமளித்தது.
அதற்கு அந்த புகைப்படம் தான் சாட்சி. இதுமட்டுமல்லாமல் இறுதி சடங்குகள் முடிவடைந்த பிறகு தேவாலயத்திலிருந்து திரும்பும் சமயத்தில், தன் அன்பு சகோதரனாக நினைக்கும் ஹரியிடம் அவராகவே சென்று பேசியதோடு மட்டுமல்லாமல், சகோதரர்கள் இருவரையும் பேச வைத்தார். அதன் பிறகு சற்று பின் தள்ளி நின்றுவிட்டார்.
மேலும் இளவரசி டயானா அரச குடும்பத்தில் வாழ வந்த பின்பும் பொதுமக்களுடன் சாதாரணமாக பழகினார். அதேபோல் கேட்டும் இருக்கிறார். இந்நிலையில் கேட்டின் தாய் மாமாவான Gary கூறுகையில், அரச குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்பட போகும் சமயம் இது. மேலும் என்னைப்பொறுத்தவரை பதவிகளிலிருந்து மகாராணியார் விலகியபிறகு வில்லியம் மற்றும் கேட் பொறுப்பேற்க தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேசிய Gary, ஹரி மற்றும் மேகனை “puppet” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அர்த்தம் பொம்மலாட்ட பொம்மைகள், முட்டாள்கள் மற்றும் எடுப்பார் கைப்பிள்ளை என்பதாகும்.