Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல்…. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன…??

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், கேளிக்கை கூடங்கள், பெரிய அரங்கு ஆகியவை மூடப்படும்.

பெரிய கடைகள் இயங்க அனுமதி இல்லை. காய்கறி, மற்றும் இதர கடைகள் வழிமுறைகளை பின்பற்றி இயங்கும். அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீக்கடையில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இருக்கும் பியூட்டி பார்லர்கள் மற்றும் சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

Categories

Tech |