கொரோனாவால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா கடந்த சில மாதங்களுக்கு முன் குறைந்துவந்துள்ளாய் நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா 2ஆம் அலை மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இதனையடுத்து வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு இணையவாசிகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவிற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அப்துல் சத்தார் என்ற தன்னார்வ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவிற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் #indianeedsoxigen என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.