Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது ரிலீஸ்?… வெளியான சூப்பர் தகவல்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Rajinikanth's latest still from Annaatthe set goes viral | Tamil Movie News  - Times of India

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இயக்குனர் சிவா, நடிகர் ரஜினி இருவரும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |